SMRV GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE (WOMAN), NAGERCOIL-1| ONLINE ADMISSION 2021
திருமூல ராம வர்ம அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாகர்கோவில்
அன்பார்ந்த மாணவிகளே, தமிழக அரசு தொழில்முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு எடுத்துவரும் திட்டங்களில் ஒன்றாக திருமூலராமவர்ம அதொப நிலையத்தில் கீழ்கண்ட தொறிற்பயிற்சி பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
2 வருட பொறியியல் தொழிற்பிரிவுகள்:
· கம்மியர்மின்னனுவியல் ELECTRONICS MECHANIC
· மருத்துவ மின்னனுவியல் நுட்பவியலாளர் TECHNICIAN MEDICAL ELECTRONICS
· கட்டிடக்கலை படவரைவாளர் ARCHITECTURAL DRAUGHTSMAN
ஒருவருட தொழிற்பிரிவுகள்:
· ஆடை தயாரித்தல் DRESS MAKING
· சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர் (ஆங்கிலம்) STENOGRAPHER SECRETERIAL ASSISTANT (ENGLISH)
· கணிணி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் COP
· டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் DTPO
· நவீன ஆடைவடிவமைப்பு தொழில்நுட்பம் FASHION DESIGN TECHNOLOGY
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் பயிலவாய்ப்பு உண்டு
எங்களது சிறப்பம்சங்கள்:
மாணவர்களுக்கு சிறந்த இயற்கையான சூழலில் காற்றோட்டமான வளாகம்
·
சுத்திகரிகப்பட்ட குடிநீர்வசதி மற்றும் மகளிருக்கென தனி கழிப்பறை வசதிகள்
· அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த ஆய்வகக்கூடங்கள்
மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட நவீன பாடத்திட்டம் மற்றும் NCVT சான்றிதழ்
கட்டனமில்லா பயிற்சி மற்றும் மாதாந்திர உதவித்தொகை ரூ 750 நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்துதல்
· மேலும் கட்டனமில்லா பேருந்து சலுகை விலையில்லா மடிக்கணிணி மிதிவண்டி பாடபுத்தகங்கள் வரைபட கருவிகள சீருடை மற்றும் காலனி அனைத்தும் வழங்கப்படும்
மாநில அளவில் முதலாவது வரும் பயற்சியாளர்களுக்கு சிறப்பு சான்றிதழுடன் ரொக்கப்பரிசு ரொக்கப்பரிசு ரூ.25000 வழங்கப்படுகிறது
மத்திய அரசின் தர நிர்ணயத்தில் திருநெல்வேலி மண்டல அளவில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நமது நிலையம் முதலாவது இடத்தை பெற்றுள்ளது
பயிற்சிக்காலத்தில் மாணவிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் விதத்தில்
பல்வேறு கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது
பயிற்சி முடித்த மாணவிகளுக்கு எங்களது தொழில்பயிற்சி முதல்வர் அவர்களின் சீரான திட்டமிடலின் மூலம் BHEL, ISRO, NPCIL போன்ற பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் INTERNSHIP பயிற்சியும், வளாக நேர்முக தேர்வின் மூலம் வேலைவாய்ப்பு வசதியும் செய்துதரப்படுகிறது மற்றும் தமிழக அரசின்மூலம் மாணவிகள் சுயதொழில் தொடங்கவும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக அரசு பெண்களுக்கான உச்ச வயதை தளர்த்தியிருப்பதால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எந்த வயது பெண்களாக இருந்தாலும் பயிற்சியில் இனைய தகுதியானவர்கள் ஆவர். எனவே அனைத்து மகளிரும் இவ்வாப்ப்ய்யினை தவறவிடாது பயிற்சியில் இணைய வின்னப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
இணையதளத்தில் விண்ணப்பிக்க www.skilltraining.tn.gov.in OR
http://nimiprojects.in/detonlineadmission2021/
நேரடியாக விண்ணப்பிக்க உடனடியாக எங்களது பயிற்சி நிலையத்திற்கு வருகை தாருங்கள், அல்லது எங்களது பயிற்றுநர்களை தொடர்புகொள்ளுங்கள்.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளது SMRV மகளிர் அ.தொ.ப நிலையம்
LOCATION: https://goo.gl/maps/orDxGDVH6LkkjXkE7
விண்ணப்பிக்க
கடைசி நாள் 28.07.2021
எனவே விரைந்து வாருங்கள் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வாழ்வில் வெற்றிக்கு வித்திடுங்கள்.
For more content: https://architecturaldraughtsman.edublogs.org/